எனக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது?
எனக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது என்று நொந்துக் கொள்ளாமல் துன்ப காலத்திலிருந்து எவ்வாறு வெளி வருவது? துன்பங்களுக்கு இடை இடையே நடக்கும் இன்பங்கள் தான் வாழ்க்கை. வெறும் இனிப்புகளையே சாப்பிட்டுக் கொண்டிருந்தால் சலித்து விடும் அல்லவா? துன்பம் வரும் வேளையில் அனைத்து மனித மனமும் இயல்பாய் நினைப்பது இதுவே,"எனக்கு மட்டும் ஏன் இப்படிலாம் நடக்குது?". ஏன்னா உங்க வாழ்க்கை மட்டுமே நீங்கள் அறிந்தது. அடுத்தவர்களின் வாழ்க்கையாய் நாம் காண்பது ஒரு மேலோட்டம்,நம்முடைய பார்வை மட்டுமே. பார்வையாளன் அறிந்ததெல்லாம், நடிகனின் நடிப்பு மட்டுமே. அதன் பின்னான வலி,உழைப்பு , ஏமாற்றம் இவையெல்லாம் நடிகனை சார்ந்தது,அவன் மட்டுமே அறிந்தது.. இங்கு அனைவருமே அப்படிதான் அவர் அவர் வாழ்க்கையின் நடிகன், அடுத்தவர்கள் வாழ்க்கையின் பார்வையாளன். இதை உணர்ந்தோமானால் நாம் மட்டும் துன்பத்தில் உழல்வது போல தோன்றுவது ஒரு பிம்பமே என்று அறிவீர்கள். இங்கே ஒருவரும் வலிகளுடனே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், எப்படி அதை தமக்கு சாதகமாக்கி வாழ்க்கையை சுவாரஸ்யமாய் கடத்துக்கிறார்கள் என்பது தான் சமார்த்தியம். என் நண்பர்கள் என்...