17 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முயற்சி - வாலிபர்கள் கைது

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பொன்மனை பகுதியை சேர்ந்த 17 -வயது சிறுமி ஒருவர் குலசேகரம் பகுதியில் ஃபேன்சி ஸ்டோரில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு தாயார் இல்லை தந்தை பராமரிப்பில் வளர்ந்து வருகிறார். குலசேகரம் ஈஞ்சகோடு பகுதியை சேர்ந்த சுஜின் (27) மற்றும் பெனட்ராஜ் (30) ஆகிய இருவரும் சேர்ந்து சிறுமியிடம் மொபைல் நம்பர் கேட்டு தொந்தரவு செய்துள்ளனர். 
https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/2021/12/27/207059-20200124851671579854378.large.jpg

இவர் பணிக்கு செல்லும் போதும் வரும் போதும் மோட்டார் சைக்கிளில் சென்று டார்ச்சர் கொடுத்துள்ளனர். மேலும் அவர் வீட்டிற்கு செல்லும் பாதையில் நின்றுகொண்டு, அவரது கையை பிடித்து இழுத்து பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளனர். இதனால் பயந்து போன சிறுமி கூச்சலிட்டு உள்ளார்.  இதனை அடுத்து சத்தம் கேட்டவுடன் அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து சிறுமி மீட்டுள்ளனர். இந்நிலையில் வாலிபர்கள் இருவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். 

இதுகுறித்து மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.  சுஜின், பெனட்ராஜ் மீது போக்சோ வழக்குபதிவு செய்யப்பட்டது. போலீசார் இருவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.பின்னர் இருவரும் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முன்விரோதம் காரணமாக பட்டப்பகலில் 17வயது சிறுவனை 5 பேர் கொண்ட கும்பல் வெட்டி கொலை

850 பவுன் நகையை நோட்டமிட்டு தூக்கிய கொள்ளையர்கள்

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் மூடல்? - அமைச்சர் திடீர் விளக்கம்!