தமிழ்நாட்டில் கட்டுப்பாடுகள் அமல்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

கொரோனா பரவல் குறைந்திருந்த நிலையில் தற்போது மெல்ல அதிகரித்து வருகிறது. உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு நாடுகள் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது.

இந்தியாவிலும் பல்வேறு மாநிலங்கள் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளன. தமிழ்நாட்டில் எப்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்த சூழலில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக காவல் துறை பிறப்பித்துள்ளது.

காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தவும், தற்போது பரவி வரும் உருமாறிய ஓமைக்ரான் வைரளர் பரவலை தடுக்கவும், தமிழக அரசு சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.

https://static.langimg.com/thumb/msid-88561726,imgsize-121398,width-700,height-525,resizemode-75/samayam-tamil.jpg 

மேலும் பண்டிகை காலங்களில் கொரோனா தொற்றுப்பரவல் அதிகரிக்கக் கூடும் என்பதால் பொது மக்கள் வெளியில் ஒன்று கூடுவதை முற்றிலும் தவிர்க்கும்படி தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது,

*வரும் 31.12.2021 அன்று இரவு தமிழ்நாட்டிலுள்ள கடற்கரைகளில் பொதுமக்கள் கூடி புத்தாண்டு கொண்டாட அனுமதி இல்லை. அதனால் அனைவரும் வீடுகளிலேயே அவரவர் குடும்பத்தினருடன் புத்தாண்டினை மகிழ்ச்சியுடன், மற்றவர்களுக்கு இடையூறு இல்லாத வகையில் கொண்டாடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முன்விரோதம் காரணமாக பட்டப்பகலில் 17வயது சிறுவனை 5 பேர் கொண்ட கும்பல் வெட்டி கொலை

850 பவுன் நகையை நோட்டமிட்டு தூக்கிய கொள்ளையர்கள்

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் மூடல்? - அமைச்சர் திடீர் விளக்கம்!