முன்விரோதம் காரணமாக பட்டப்பகலில் 17வயது சிறுவனை 5 பேர் கொண்ட கும்பல் வெட்டி கொலை
சென்னை தண்டையார்பேட்டை திலகர் நகர் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த சீனா என்கின்ற சீனிவாசன் தண்டையார்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலம் அருகே ஷேர் ஆட்டோவில் வந்து கொண்டு இருந்த போது, இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த 5பேர் கொண்ட மர்ம நபர்கள் சீனிவாசனை இருசக்கர வாகனத்தில் உட்கார வைத்து, புதுவண்ணாரப்பேட்டை மாதா கோவில் தெருவில் ஓட ஓட விரட்டி கத்தியால் தலையில் வெட்டி விட்டு ஐந்து பேர் தப்பி ஓட்டம் பிடித்துள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த புதுவண்ணாரப்பேட்டை போலீசார்
சீனிவாசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி
மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக