850 பவுன் நகையை நோட்டமிட்டு தூக்கிய கொள்ளையர்கள்

 புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் அருகே உள்ளது கோபாலபட்டினம். இங்கு வசிக்கும் ஜாபர் சாதிக் என்பவர் குடும்பத்துடன் புருனே நாட்டில் செட்டிலாகிவிட்டார். இதனால், கோபாலபட்டணத்தில் உள்ள அவரது சொந்த வீட்டில் பூட்டிய நிலையிலேயே இருந்துள்ளது. இதனை வெகுநாளாக நோட்டமிட்ட கொள்ளையர்கள், வீட்டில் புகுந்து கைவரிசை காட்டியுள்ளனர்.

இன்று வழக்கம்போல் ஜாபரின் வீட்டை பார்த்த அக்கம்பக்கத்தினர், வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதனடிப்படையில், அங்கு சென்று காவல்துறையினர் பார்த்தபோது, வீட்டில் இருந்த அனைத்து அறைக் கதவுகளும் உடைக்கப்பட்டிருந்ததுள்ளது. மேலும், நகை மற்றும் பணம் வைக்கப்பட்டிருந்த பீரோவும் உடைக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளது. விசாரணையில், பீரோவில் இருந்த 850 பவுன் நகைகளையும் கொள்ளையர்கள் தூக்கிச் சென்றது தெரியவந்தது. 

இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மோப்ப நாய் உதவியுடன் கொள்ளையர்களை பிடிக்கும் முயற்சியிலும் காவல்துறையினர் ஈடுபட்டனர். அந்த முயற்சி கைக்கொடுக்காத நிலையில், கைரேகை பதிவுகள் உள்ளிட்டவற்றைக் கொண்டு, கொள்ளையர்களை பிடிக்க காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர். நீண்ட நாட்களாக பூட்டியிருந்த வீட்டில் கொள்ளையர்கள் இரவு நேரத்தில் வந்து கைவரிசைக் காட்டியிருப்பது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முன்விரோதம் காரணமாக பட்டப்பகலில் 17வயது சிறுவனை 5 பேர் கொண்ட கும்பல் வெட்டி கொலை

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் மூடல்? - அமைச்சர் திடீர் விளக்கம்!