மதுரை ஆவின் நிறுவனத்தில் விசாரணை
மதுரை ஆவின் நிறுவனத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இரவு முழுவதும் நடத்திய விசாரணையில் திருப்பதி லட்டு தயாரிப்புக்கான நெய் அனுப்பியதில் முறைகேடு நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த அதிமுக ஆட்சியின்போது பால்வளத்துறை அமைச்சராக கே.டி.ராஜேந்திர பாலாஜி பதவி வகித்தபோது ஆவின் நிறுவனத்தில் பல்வேறு முறைகேடு நடைபெறதாக பரவலாக புகார் எழுந்ததது.
இதையடுத்து மதுரை ஆவின் நிறுவனத்தில் 2019 முதல் நடைபெற்ற பணி நியமனங்கள் , பொருள்கள் கொள்முதல் , தற்காலிகப் பணி நியமனங்களில் நடைபெற்ற முறைகேடுகள் , ஆவினுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பு உள்ளிட்ட புகார்கள் குறித்து மதுரை சாத்தமங்கலம் பகுதியில் உள்ள ஆவின் நிறுவனத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
ஆவின் மேலாளர் , அதிகாரிகள் மற்றும் கணக்கர்கள் , பணியாளர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது .
கருத்துகள்
கருத்துரையிடுக