15 முதல் 18 வயதுள்ள சிறார்களுக்கு கோவாக்சின் கொரோனா தடுப்பூசி போட ஜனவரி 1 முதல் முன்பதிவு
கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் 15 முதல் 18 வயதுடையோருக்கு போடுவதற்கான வழிகாட்டுதல்களை இந்திய சுகாதாரத்துறை வெளியிட்டிருக்கிறது.
கொரோனா பாதிப்பு மற்றும் ஒமிக்ரான் பரவலின் உலகளாவிய தாக்கத்தை கவனத்தில் கொண்டு இந்தியாவில் 15 முதல் 18 வயதுடையடையோருக்கு கொரோனா தடுப்பூசி போட சில வழிகாட்டுதல்களை இந்திய சுகாதாரத்துறை வெளியிட்டிருக்கிறது.
இது தொடர்பாக அனைத்து மாநில அரசுகளுக்கும் இந்திய சுகாதாரத்துறை அனுப்பியுள்ள கடிதத்தில் இடம்பெற்றுள்ள தகவல்களின் முக்கிய அம்சங்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.
1. கொரோனா தடுப்பூசி 15 முதல் 18 வயதுடைய சிறார்களுக்கு 2022ஆம் ஆண்டு ஜனவரி 3ஆம் தேதி முதல் போடப்படும். அத்தகைய பயனாளிகளுக்கு இந்திய தயாரிப்பான "கோவாக்சின்" மட்டுமே செலுத்தப்படும்.2. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இரண்டு டோஸ்களைப் பெற்ற சுகாதாரப் பணியாளர்கள் (HCWs) மற்றும் முன்கள பணியாளர்களுக்கு (FLWs) சிறப்பு டோஸ் தடுப்பூசி 2022ஆம் ஆண்டு ஜனவரி 10 முதல் வழங்கப்படும். இரண்டு டோஸ் போட்டுக் கொண்ட நாளில் இருந்து ஒன்பது மாதங்களை கடந்திருந்தால் இந்த சிறப்பு டோஸ் போட முன்னுரிமை மற்றும் வரிசைப்படுத்துதல் கணக்கிடப்படும். அதாவது 2ஆம் டோஸ் போட்டதில் இருந்து அந்த பயனாளி 39 வாரங்களைக் கடந்திருந்தால் சிறப்பு டோஸ் பெற தகுதி பெறுகிறார்.
3. இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசியைப் பெற்ற 60 வயது மற்றும் அதற்கு மேல் உள்ள அனைத்து நபர்களுக்கும் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் 2022ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி முதல் 'முன்னெச்சரிக்கை டோஸ் தடுப்பூசி' வழங்கப்படும்.அனைத்து குடிமக்களும் அவர்களின் வருமான நிலையைப் பொருட்படுத்தாமல், அரசாங்கத்தில் இலவச கொரோனா தடுப்பூசியைப் பெற உரிமை உண்டு. தடுப்பூசி மையங்கள், பணம் செலுத்தும் திறன் உள்ளவர்கள் தனியார் மருத்துவமனைகளின் தடுப்பூசி மையங்களைப் பயன்படுத்த ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக