தீரன் பட பாணியில் கொள்ளை: 12-ஆம் வகுப்பு மாணவன் உட்பட இருவர் கைது..
அரக்கோணத்தை அடுத்த அவினாசிகண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் ஆடிட்டர் புஷ்கரன். இவருக்கு வயது 25. இவர் கிராமத்திற்கு வெளியில் தனக்கு சொந்தமான வயலின் நடுவில் தனியாக வீடு கட்டி தனது தாய் சுதா(52) பெரியம்மா லதா(57) பாட்டி ரஞ்சிதம்மாள்(76) ஆகியோருடன் வசித்து வருகிறார்.
கடந்த வாரம் நள்ளிரவில் யாரோ வீட்டின் கதவை தட்டும் சத்தம் கேட்டு திறந்தபோது முகமூடி அணிந்த 3 மர்ம நபர்கள் நாட்டு துப்பாக்கியால் ஜன்னல் வழியாக சுட்டு, பயமுறுத்தி, வீட்டின் உள்ளே நுழைந்து, பெண்கள் அணிந்திருந்த நகை மற்றும் வீட்டிலிருந்த 25 சவரன் தங்க நகைகள், ரூ. 60,000 பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து கொண்டு வீடு முழுவதும் மிளகாய் பொடி தூவி சென்றனர்.
நாட்டு துப்பாக்கியால் சுட்டதில் குண்டு ரவை சிதறி படுகாயமடைந்த புஷ்கரன், சுதா, லதா மற்றும் ரஞ்சிதம்மாள் உட்பட நால்வரும் உடனடியாக சிகிச்சைக்கு அரக்கோணம் அரசு மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களுக்கு அங்கு முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்கு சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தீரன் திரைப்பட பாணியில் நடந்த இச்சம்பவம் குறித்து தகவலறிந்த அரக்கோணம் நகர காவல்துறையினர் விசாரனை நடத்தி மர்ம நபர்களை தேடி வத்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக தமிழக கூடுதல் டிஜிபி தாமரைக் கண்ணன் மேற்பார்வையில் 5
தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர போலீசார் விசாரணை நடத்திவந்தனர்.
கொள்ளையர்கள் தமிழ், ஆங்கிலம், இந்தி மொழிகள் பேசியதாக கூறப்பட்டதால் வட
இந்திய கொள்ளையர்களாக இருக்கலாம் என்கிற கோணத்தில் முதற்கட்ட விசாரணையை
தொடங்கிய காவல்துறையினருக்கு, பின்னர் இந்த கொலை தொடர்பாக உள்ளூர்
கொள்ளையர்கள் தான் ஈடுபட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக துப்பு
கிடைத்திருக்கிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக